search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானிய விலை"

    • மானிய விலையில் பண்ணை எந்திரங்கள் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 5 மாவட்டங்களில் இருந்து மதுரை உள்பட ஒரு பயனாளியை தேர்வு செய்யும் பொருட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இவ்வாண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது. தென்மா வட்டங்களில் தெற்கு மண்டலம் அமைப்பில் உள்ள 5 மாவட்டங்களில் இருந்து மதுரை உள்பட ஒரு பயனாளியை தேர்வு செய்யும் பொருட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் தீவனப்பற்றாக்குறையை போக்கவும் பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

    அதனைத்தொடர்ந்து, தற்போது தீவனப்பயிர் அறுவடை எந்திரம், தீவனப்பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் எந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை 25 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் தகுதியானோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மேற்கண்ட உபகர ணங்களின் மொத்த விலை ரூ.42 லட்சமாகும். இதில் பயனாளியின் பங்குத்தொகை ரூ.31.5 லட்சம் போக, 10.5 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்குகிறது.

    இந்த திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள், பால்பண்ணை உரிமையா ளர்கள், சுயஉதவிக் குழுவினர் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்கள் ஆகியவை பயனாளியாகும் பொருட்டு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் படி ஒரு வருடத்திற்கு 3200 மெட்ரிக் டன் ஊறுகாய்புல் தயாரித்து விவசாயிகளுக்கு தேவையான பகுதியில் விற்பனை செய்வதோடு தீவனப்பற்றாக்குறையை பெரிதும் குறைக்க சாதக மாவதோடு தீவனப் பயிர் தொழில் முனைவோராக விவசாயிகளை உருவாக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டம் தொடர்பாக தகுதியான நபர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயறு வகைகள் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
    • நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதன் தலைமை வகித்தாா்.இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி வட்டாரச் செயலாளா் கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- ஊத்துக்குளி, அவிநாசி வட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி சோளவிதைப்பு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் விதைப்புக்காக நிகழாண்டு தனியாா் விற்பனை நிலையங்களில் விதைசோளம் கிலோ ரூ.60 முதல் ரூ.85 வரையிலும், பயறு வகைகள் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.தற்போது டீசல் விலை அதிகரித்துள்ளதால் டிராக்டா்களுக்கான வாடகை கட்டணமும் அதிகரித்து விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனா்.ஆகவே, மானாவாரி விதைப்புக்காக வேளாண் துறை மூலமாக விதைசோளம், பயறு வகைகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி பேரூராட்சி 7 -வது வாா்டு உறுப்பினா் கு.சரஸ்வதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -ஊத்துக்குளி டவுனில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக இரு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த இரு கடைகளும் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு சொந்தமான வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.ஆகவே நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுமாா் 4 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்களுக்கு ஒரு மடைவிட்டு ஒரு மடை தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

    அதிலும் திருப்பூா், பல்லடம், காங்கயம் போன்ற பகுதிகளுக்கு தண்ணீா் முறையாக வருவதில்லை. இது தொடா்பாக அப்பகுதி விவசாயிகள் ஏராளமான மனுக்களை கொடுத்தும் பலனளிக்கவில்லை.இந்நிலையில், பிஏபி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்துக்கு போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், வட்டாட்சியா்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • வேளாண்மை பண்ணை கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • 6 பொருட்கள் கொண்ட தொகுப்பாக 50 சதவிகித மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது.

    உடுமலை :

    உடுமலை வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணைக்கருவிகள் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    உடுமலை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை பண்ணை கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த தொகுப்பில் 1 கடப்பாரை, 1 இரும்பு சட்டி ,1 களைக்கொத்து,1 மண்வெட்டி,2 கதிர் அருவாள் என மொத்தம் 6 பொருட்கள் கொண்ட தொகுப்பாக 50 சதவிகித மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் சின்ன குமாரபாளையம்,குருவப்ப நாயக்கனூர்,மொடக்குப்பட்டி,தீபாலப்பட்டி,கணக்கம்பாளையம்,கண்ணமநாயக்கனூர்,சின்னவீரன்பட்டி,ஆலாம்பாளையம்,ஜிலோபநாயக்கன்பாளையம்,தின்னப்பட்டி,குறுஞ்சேரி,வடபூதனம் ஆகிய 12 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு 300 தொகுப்புகளும்,மற்ற ஊராட்சிகளுக்கு 30 தொகுப்புகளும் ஆக மொத்தம் 330 தொகுப்புகள் 4.95 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

    • விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • உரங்கள் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் அமராவதி ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் தென் மேற்கு பருவ மழையை தொடர்ந்து குறுவை, ஆடிப்பட்ட சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான விதை ரகங்கள் மற்றும் இடு பொருட்கள் வேளாண் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவையான அளவு இருப்பு உள்ளதால் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் விதை, 105 நாட்கள் வயதுடைய ரகம் (கோ51) , 110 நாட்கள் வயதுடைய ஏடிடி (ஆர்) 45 ரகங்களும், 130 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட விஜிடி (வைகை டேம்) மற்றும் பிரியாணி தயாரிப்பு ஏற்ற வாசனை நெல் விதைகளும் தேவையான அளவு இருப்பு உள்ளது.மானிய விலையில் வழங்கப்படும் இந்த நெல் ரகங்களை வாங்கி, விவசாயிகள் பயன் பெறலாம்.மேலும் 75 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட உளுந்து வம்பன், 110 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட நிலக்கடலை (வி.ஆர்.டி-8), மக்காச்சோளம் (சி.ஓ.எச்.,எம்-8), கொண்டைக்கடலை, (என்.பி.இ.,ஜி 49) போன்ற சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    அதோடு விதை நேர்த்தி செய்வதற்கு உயிர் உரங்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விதை நேர்த்தி செய்வதன் வாயிலாக பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.மேலும் 25 சதவீதம் வரை உரச்செலவு குறையும். எவ்வளவுதான் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து பயிர்களுக்கு கொடுத்தாலும், நுண்Èட்டஉரமிடுதல் மிகவும் அவசிய தேவையாகும்.நெல், சிறு தானியங்கள், பயறு வகை பயிர்கள், தென்னைக்கு ஏற்ற நுண்Èட்ட உரங்கள், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, காப்பர், போரான் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட நுண்Èட்ட உரங்கள் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • மானிய விலையில் வேளாண் எந்திரம் பெற விவசாயிகளுக்கு வாய்ப்பு உள்ளது.
    • மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் மானிய விலையில் விற்கப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் விளை வித்த பொருள்களை சந்தைப்படுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்புகளை குறைத்து சேமிப்புக்கால அளவை அதிகரித்து மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் மானிய விலையில் விற்கப்படு கின்றன.

    எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு, தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரைவை எந்திரம், தானியம் அரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோள் உரித்து வகை பிரிக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், தீவனம் அரைக்கும் எந்திரம் ஆகியவை 40 சதவிகித மானியம் அல்லது அரசு நிா்ணயித்த உச்சவரம்புத் தொகையில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.

    மேலும் தகவல்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் பிரிவு மற்றும் பரமக்குடியில் உள்ள வேளாண்மைப்பிரிவு உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×